சச்சினைத் தொடர்ந்து தன் கதையைச் சொல்ல வருகிறார் சானியா!
இந்தூர்: சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையைத் தொடர்ந்து சானியா மிர்ஸாவும் தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்த நூல் வெளியாகுமாம்.
இது சுயசரிதை காலம் போலும். சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையை வெளியிட்டு பரபரப்பையும், பப்ளிசிட்டியையும் கிளப்பி விட்டுள்ளார்.
தனது நூலில், இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில்தேவை விமர்சித்துள்ளார், கிரேக்சேப்பலை வறுத்தெடுத்துள்ளார், ராகுல் டிராவிடையும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் கடுப்படித்துள்ளார்.
இந்த நிலையில் சானியா மிர்ஸாவும் சுயசரிதை எழுதுகிறாராம்.

நானும் எழுதுகிறேனே
இதுகுறித்து இந்தூரில் அவர் கூறுகையில், நான் சுயசரிதை எழுதி வருகிறேன். ஆனால் எப்போது வெளியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

26 சேப்டர் குளோஸ்!
ஏற்கனவே 26 சேப்டர்களை எழுதி விட்டேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். புதிய சாப்டர்களை சேர்க்க வேண்டும்.

எப்ப முடிக்கப் போகிறேன்
எப்போது இதை முடிப்பது என்று தெரியவில்லை, முடிவு செய்யவில்லை. தேதியையும் முடிவு செய்யவில்லை.

என்னைப் பற்றி நிறைய எழுதி விட்டனர்
என்னைப் பற்றி நிறைய எழுதி விட்டனர். அதில் பாதி உண்மை, பாதி பொய். எனவே என் கதையை நானே சொல்ல முடிவெடுத்தேன்.

சச்சினை விமர்சிக்கக் கூடாது
சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிள்பியுள்ளன. ஆனால் புக்கை விற்பதற்காக சர்ச்சைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது. சச்சின் அப்படிப்பட்டவர் இல்லை என்பது எனது கருத்து. அவர் அப்படிச் செய்ய மாட்டார் என்றார் சானியா.


Click it and Unblock the Notifications