Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சே, போச்சே, சானியாவுக்கு பட்டம் போச்சே

நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதிக்கு நுழையும் வாய்ப்பை, சானியா மிர்சா ஜோடி இழந்தது.

இந்தாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் போட்டிகள் கடைசி கட்டத்துக்கு வந்துள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில், நேற்று இரவு நடந்த அரை இறுதி ஆட்டத்தில், தன்னுடைய முன்னாள் ஜோடியான சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் தைபேயின் யங் ஜான் சான் ஜோடியுடன் சானியா மிர்சா, சீனாவின் ஷுவாய் பெங்க் ஜோடி மோதியது.

சானியா ஜோடி முன்னிலை

சானியா ஜோடி முன்னிலை

பரப்பாக துவங்கிய இந்த ஆட்டத்தில் முதல் செட்டில், 3-0 என, சானியா ஜோடி முன்னிலை பெற்றிருந்தது. அதன்பிறகு ஹிங்கிஸ் ஜோடி அபாரமாக விளையாடி 6-4 என்ற கணக்கில் வென்றது. இரண்டாவது செட்டிலும், சானியா ஜோடி 3-1 என முன்னிலை பெற்று வந்தது. ஆனால் ஹிங்கிஸ் ஜோடிக்கு முன்னாள் அது செல்லுபடியாகவில்லை. இரண்டாவது செட்டையும் 6-4 என ஹிங்கிஸ் ஜோடி வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

மிகச் சிறப்பான ஆட்டம்

மிகச் சிறப்பான ஆட்டம்

யுஎஸ் ஓபனில் அரை இறுதியில் தோற்றாலும், இந்த ஆண்டில், சானியா மிர்சாவின் மிகச் சிறப்பான ஆட்டமாக இது அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டனில், மூன்றாவது சுற்றில் வெளியேறினார். பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

ஜோடி மாற்றம்

ஜோடி மாற்றம்

இந்த ஆண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது ஜோடிகளை பலமுறை மாற்றினார் சானியா. ஆஸ்திரேலிய ஓபனில், பார்பரா ஸ்டிரிகோவாவுடன் விளையாடினார். பிரெஞ்ச் ஓபனில், யரோஸ்வாலா ஸ்வேதோவாவுடன் இணைந்து விளையாடினார்.

பிரிஸ்பேன் போட்டியில் மட்டும்

பிரிஸ்பேன் போட்டியில் மட்டும்

இந்தாண்டு சீசனில், அமெரிக்காவின் பெதானி மாட்டெக் சான்ட்ஸ் உடன் ஜோடி சேர்ந்து, பிரிஸ்பேன் போட்டியில் மட்டுமே பட்டம் வென்றார் சானியா. ஸ்டிரிகோவாவுடன் இணைந்து, சிட்னியில் இறுதி வரை நுழைந்தார்.

Story first published: Saturday, September 9, 2017, 10:14 [IST]
Other articles published on Sep 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+