Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லியாண்டர், போபண்ணாவைத் தொடர்ந்து சானியா ஜோடியும் நாக் அவுட் ஆனது!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே ஆட்டமிழந்து வெளியறியதைப் போலவே மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸா - பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

சீனாவின் ஸுயாய் ஸாங் மற்றும் ஸுயாய் பெங் ஜோடி, இந்திய ஜோடியை 7-6 (8-6), 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Sania - Prarthana fail in doubles event

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் நடந்த இப்போட்டியில் சானியா மிர்ஸா - பிரார்த்தனா ஜோடி கடுமையாக மோதிப் பார்த்தது. ஆனாலும் சீன ஜோடி அதைத் தகர்த்து வெற்றியைத் தொட்டு விட்டது.

இந்தியாவுக்கு டென்னிஸில் இனி ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது, கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டமாகும். இதில் சானியா மிர்ஸா - ரோஹன் போபண்ணா3 ஜோடி ஆடவுள்ளது. இந்த ஒரு வாய்ப்பு மட்டுமே இந்தியாவுக்கு உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

சானியாவுடன் இணைந்து ஆடிய பிரார்த்தனாவின் ஆட்டத்தில் குவாலிட்டி இல்லை. அதேசமயம், கடுமையாக போராடும் குணத்தை அவர் வெளிப்படுத்தினார். அவருடை சர்வீஸ்கள் சரியில்லை. அதுதான் இந்தியாவை பலவீனப்படுத்தி விட்டது. பல நேரங்களில் அவரது சர்வீஸ் சொதப்பலாக இருந்தது.

Story first published: Sunday, August 7, 2016, 9:43 [IST]
Other articles published on Aug 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+