விம்பிள்டனை வென்று ஹைதராபாத் திரும்பிய சானியா - "ஹீரோயின்" வெல்கம் கொடுத்த ரசிகர்கள்
ஷாம்சாபாத், ஹைதராபாத்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று சாதனை படைத்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஹைதராபாத் திரும்பினார்.
இன்று அதிகாலையில் ஹைதராபாத்தில் உள்ள ஷாம்சாபாத் விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு வீராங்கனையாக வரவேற்கப்பட்டார் சானியா.
அவருடன் அவரது தந்தை இம்ரான் மிர்ஸாவும் உடன் வந்தார்.

விம்பிள்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பட்டத்தை மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து வென்றார் சானியா. இந்திய வீராங்கனை ஒருவர் மகளிர் இரட்டையர் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சானியா சாதனை படைத்துள்ளார்.

விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்தவர்கள் மத்தியில், அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று கூறினார் சானியா.
Story first published: Tuesday, July 14, 2015, 17:25 [IST]
Other articles published on Jul 14, 2015


Click it and Unblock the Notifications