டென்னிஸ் ரேங்கிங் – 90வது இடத்தில் சானியா மிர்ஸா
டெல்லி: கையில் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கின்ற போதிலும் சானியா மிர்ஸாவுக்கு டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90வது இடத்திற்கு அவர் வந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பிசியில் உள்ளார் சானியா. கூடவே ஆயிஷா ரூபத்தில் பல்வேறு சர்ச்சைகளும் அடுத்தடுத்து வரிசை கட்டிக் கொண்டிருப்பதால் டென்ஷனுக்குப் பஞ்சமே இல்லை.
இந்த நிலையில் சானியாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வந்துள்ளது டென்னிஸ் தர வரிசைப் பட்டியல். இதில் சானியா சற்று முன்னேற்றம் கண்டு 90வது இடத்திற்கு வந்துள்ளார்.
அதேசமயம், இரட்டையர் தரவரிசைப் பட்டயலில் 44வது இடத்திற்கு இறங்கி விட்டார் சானியா. கடந்த வாரம் அவர் 36வது இடத்தில் இருந்தார்.
வீரர்களைப் பொறுத்தமட்டில், லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் 6வது இடத்தில் இருக்கிறார். மகேஷ் பூபதி, 7வது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications