பைலட் பென் டென்னிஸ்: 2வது சுற்றில் சானியா
நியூ ஹேவன்:அமெரிக்காவின் நியூ ஹேவன் நகரில் நடந்து வரும் பைலட் பென் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் விளையாட இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றுள்ளார்.
முதல் சுற்றுப் போட்டியில் அவர் ஸ்பெயின் வீராங்கனை அனபெல் மெடினா காரிகுஸுடன் மோதினார். இந்தப் போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் சானியா மிர்ஸா சிறப்பான வெற்றியைப் பெற்றார்.
2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை அலோனா போண்டெரன்காவை அவர் சந்திக்கிறார்.
தற்போது தர வரிசைப் பட்டியலில் 28வது இடத்தில் உள்ள சானியா, விரைவில் தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 26வது ரேங்க் கொடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications