புதிய உச்சத்தில் சானியா-27வது ரேங்க்!
டெல்லி:நடப்பு டென்னிஸ் சீசனில் 4 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளதன் மூலம் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளில் 20வது ரேங்குக்குக்கும், ஒற்றையர் பிரிவில் 27வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் 30 இடங்களுக்குள் முன்ேனறியிருந்தார் சானியா. இந்த நிலையில் சின்சினாட்டி, ஸ்டான்போர்டு, சான்டியாகோ, நியூ ஹேவன் ஆகிய போட்டிகளில் முதல் 20 இடங்களில் உள்ள பல முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி சாதனை படைத்தார் சானியா.
இதன் காரணமாக ஒற்றையர் பிரிவில் 27வது ரேங்குக்கு முன்னேறியுள்ளார். இரட்டையர் பிரிவில் முதல் முறையாக 20வது ரேங்குக்கு முன்னேறியுள்ளார் சானியா
இன்று தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து ஆடவுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மாட்டக்குடன் இணைந்து விளையாடவுள்ளார்.
இந்தியாவின் ரோகன் போபண்ணா, 261வது இடத்தில் உள்ளார். பிரகாஷ் அமிர்தராஜ் 272வது இடத்தில் உள்ளார். கரண் ரஸ்தோகி 344வது தர வரிசையில் உள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications