Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யு.எஸ். ஓபன்: சானியா, ஷரபோவா தோல்வி


நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சானியா மிர்ஸாவும் தோல்வி அடைந்தார்.

Click to Enlarge Click to Enlarg
Click to Enlarge Click to Enlarge


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரெட்வான்ஸ்காவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில், ஷரபோவா 4-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்ய வீராங்கனை அன்னா சக்வட்ஸேவை சந்தித்தார். இப்போட்டியில் சானியா வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே நிலவியது.

ஆனால், அன்னாவின் அணல் பறந்த ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றார் சானியா. இதன் மூலம் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சானியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னணி வீராங்கனைகளான ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசும் தோல்வியை தழுவினர்.

ஆண்கள் இரட்டையர் போட்டியின் 2வது சுற்றிலும் இந்தியாவுக்கு சரிவு காணப்பட்டது. மகேஷ் பூபதி ஜிமோன்ஜிக் ஜோடி தங்களது 2வது சுற்று ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினர்.

கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு வெற்றி:

அதேசமயம், கலப்பு இரட்டையர் ஆட்டத்தின் 2வது சுற்றில் சானியா-பூபதி ஜோடி, பிரான்ஸ் நாட்டின் குளோவின் மற்றும் அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடியை வென்று 3வது சுற்றுக்கு முன்னேறியது

இதே போன்று இந்தியாவின் லியாண்டர் பயஸ் - அமெரிக்காவின் சுகுனசி ஜோடியும் கலப்பு இரட்டையரில் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+