அரை இறுதியில் பயஸ் ஜோடி;br/இரட்டையர் காலிறுதியில் சானியா
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் விளையாட சானி மிர்ஸா ஜோடி தகுதி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்கு லியாண்டர் பயஸ் ஜோடி முன்னேறியுள்ளது.
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மாறி மாறி அதிர்ஷ்டமும், சோதனையும் ஏற்பட்டது.
மகளிர் இரட்டையர் போட்டியின் காலிறுதிக்கு சானியா ஜோடி முன்னேறியது. அதேசமயம், கலப்பு இரட்ைடயர் பிரிவில் சானியா - மகேஷ் பூபதி ஜோடி தோல்வியுற்றது. ஆனால் இன்னொரு கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்ஸாவும், அமெரிக்காவின் பெத்தானி மட்டக்கும் லிஸா ரேமண்ட், சமந்தா ஸ்டோசர் ஜோடியை சந்தித்தது. இப்போட்டியில், சானியா ஜோடி 2-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா, பூபதி ஜோடி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில், விக்டோரியா அசரன்கா, மாக்ஸ் மிர்னயி ஜோடியை சானியா- பூபதி ஜோடி சந்தித்தது. இதில் 4-6, 1-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடிக்கு தோல்வி கிடைத்தது.
இருப்பினும் இன்னொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு சந்தோஷ செய்தி கிடைத்தது. பழம்பெரும் வீரர் லியாண்டர் பயஸ், மேகான் ஷானாசி ஜோடி, ஆஷ்லி ஹர்க்லெராட், ஜஸ்டின் கிம்நெல்ஸ்டாப் ஜோடியை, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications





