பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி

சானியாவும், ரஷ்யாவின் எலீனா வெஸ்னினா ஜோடியும் இணைந்து, அமெரிக்காவின் லீஸல் ஹியூபர், லிசா ரேமண்ட் ஜோடியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
சானியா ஜோடி, அமெரிக்க ஜோடியை 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை எளிதாக வென்றது. ஆனால் 2வது செட்டை 2-6 என்ற கணக்கில் பறி கொடுத்தது. இதனால் 3வது செட் விறுவிறுப்பான ஆட்டத்தைக் கண்டது. இந்த செட்டை கடுமையாக போராடி 6-4 என்ற கணக்கில் சானியா ஜோடி கைப்பற்றி வெற்றியைப் பெற்றது. 105 நிமிடங்கள் நடந்த இந்த அரை இறுதிப் போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விருந்தாக அமைந்தது.
இறுதிப் போட்டியில், செக் நாட்டின் ஆண்ட்ரியா லவச்கோவா, லூசி ரெடெச்கா ஜோடியை சந்திக்கவுள்ளது.
சானியாவின் வாழ்க்கையில் இந்த இறுதிப் போட்டியையும் சேர்த்து இதுவரை 3 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அதில் இரண்டு போட்டிகள் ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியாகும். மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சானியா நுழைவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை மகேஷ் பூபதியுடன் இணைந்து சானியா வென்றார். 2008ம் ஆண்டு இதே ஜோடி தோல்வியுற்றது.
பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் சானியா விளையாடியபோது முழங்கால் வலியுடன்தான் விளையாடினார். இருப்பினும் வலி அவரது ஆட்டத்தைப் பாதிக்கவில்லை என்பது வெற்றியிலிருந்து தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications