பிரெஞ்ச் ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை நழுவ விட்டார் சானியா

பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்திற்கு சானியா ஜோடி தகுதி பெற்றது. சானியா கிராண்ட்ஸ்லாம், மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும். எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் சானியா ஜோடிக்கும், செக் நாட்டின் ஆண்ட்ரியா லவச்கோவா மற்றும் லூசி ரடெச்கா ஆகியோருக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில், செக் நாட்டு ஜோடி, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய, ரஷ்ய ஜோடியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. இந்த ஜோடி பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தோல்வி குறித்து சானியா மிர்ஸா கூறுகையில்,
இது நிச்சயம் கசப்பான தோல்விதான். பெரும் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் 2வது இடத்தைப் பெற்றது சற்று ஆறுதல் தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை நான் பிட்னஸுக்காக போராடினேன். எனவே இந்தத் தோல்வி கூட எனக்கு வெற்றி போலத்தான்.
தோல்வி எப்போதும் தோல்விதான். இருப்பினும் இதை நான் பெரும் பாதிப்பாக கருதவில்லை. அடுத்தடுத்த சாதனைகளை நோக்கி நான் நடைபோட வேண்டியது அவசியம் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications