Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் விபத்துகள் : ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் முறிவு... தூக்கி வீசப்பட்ட சைக்கிள் வீராங்கனை

ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது. பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின் ஆண்களுக்கான தகுதி சுற்று நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற 26வயதான பிரான்ஸ் வீரர் சமீர் அயிட் தனது சாகசத்தை காண்பித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவரின் இடதுகால்முறிந்தது.

Scary injury: French gymnast Samir Ait Said snaps his leg on vault

அவரை அவசர அவசரமாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது போன்ற உடற்பயிற்சிகள் தான் போட்டியின் போது ஒருவரின் திறமையை நிரூபிக்க தேவையானதாகும். இருப்பினும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது மிகவும் பின்னடைவை தரும் விஷயம் ஆகும் என அவரின் பயிற்சியாளர் தெரிவித்தார்.

இவர் 2015ல் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ல் நடந்த ஐரோப்பிய போட்டியில் தங்கத்தையும், 2013ல் நடந்த போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் பிரான்ஸ் நாட்டு வீரர்கள் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்த சிலநிமிடங்களில் ஜெர்மனியின் ஆண்ட்ரஸ் டபா தான் உடற்பயிற்சி செய்யும் போது காயம் ஏற்பட்டது.

ஒலிம்பிக் போட்டியின் 2ம் நாளில் பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின்,33 விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

Scary injury: French gymnast Samir Ait Said snaps his leg on vault

பெண்களுக்கான 10 கி.மீ சைக்கிள் போட்டி ஞாயிறுக் கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வான் விலுடின் வேகமாக சைக்கிளை ஒட்டிச் சென்றார். அபாகரமான ஒரு வலைவில் திரும்பும்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறினார், சைக்கிளோடு தூக்கி வீசப்பட்ட அவர் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தார். சிறிது நேரம் விழுந்தவாறே கிடந்த வான் விலுடினை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Story first published: Thursday, August 11, 2016, 16:30 [IST]
Other articles published on Aug 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+