For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகோதரி வீனசை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் செரீனா! ஸ்டெபி கிராப் சாதனை தகர்ப்பு

By Veera Kumar

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று அசத்தியுள்ள செரீனா வில்லியம்ஸ், இதன் மூலம் கிரான்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்வதில் புது சாதனையை படைத்துள்ளார்.

உலகின் முன்னணி கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன். இதில் மகளிர் பிரிவு இறுதி போட்டிக்கு செரீனாவும் அவர் சகோதரி வீனசும் முன்னேறியிருந்தனர்.

Serena beat sister Venus 6-4 6-4 in final

இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இறுதி போட்டியில், சகோதரி வீனஸ் வில்லியம்சை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார் செரீனா.

இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை 23 முறை வென்றவர் என்ற சாதனை செரீனாவுக்கு கிடைத்துள்ளது. ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் இதற்கு முன்பு 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் இருந்து வந்தார். 35 வயதாகும் செரீனா 18 வருடங்களுக்கு முன்பு தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார்.

Story first published: Saturday, January 28, 2017, 16:06 [IST]
Other articles published on Jan 28, 2017
English summary
Serena Williams has beaten her sister Venus in the Australian Open final, winning a record-breaking 23rd Grand Slam.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X