Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஓபன் டென்னிஸ் - பயஸ் ஜோடிக்கு கலப்பு இரட்டையர் பட்டம்

Serena williams
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவுப் பட்டத்தை இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி வென்றுள்ளது.

மெல்போர்னில் இன்று நடந்த இறுதிப் போட்டியில், பயஸ் - பிளாக் ஜோடி, ரஷ்யாவின் ஏக்தரினா மாக்கரோவா - செக் நாட்டின் ஜரோஸ்லோவ் லெவின்ஸ்கி ஜோடியை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.

இந்த வெற்றி லியாண்டருக்கு 11வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கலப்பு இரட்டையர் பிரிவில் 5வது பட்டமாகும். மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்தியர் என்ற பெருமையை வைத்துள்ள மகேஷ் பூபதியை சமன் செய்துள்ளார் பயஸ்.

இன்றைய போட்டியின் தொடக்கத்திலிருந்தே பயஸ் -பிளாக் ஜோடியின் கையே மேலோங்கியிருந்தது.

பயஸ் - பிளாக் ஜோடிக்கு இது 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்பு 2008ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை அவர்கள் வென்றிருந்தனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இந்த ஜோடி தகுதி பெற்றிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தோல்வியைத் தழுவினர். ஆனால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியும், வெறியும் இருவரிடமும் இருந்ததை ஆட்டத்தில் காண முடிந்தது.

குறிப்பாக பயஸின் ஆட்டத்தில் சூடு பறந்தது. 36 வயதான போதிலும் பயஸின் மின்னல் வேக ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

கடந்த 2003ம் ஆண்டு பழம்பெரும் வீராங்கனை மார்ட்டினா நவ்ரத்திலோவாவுடன் இணைந்து லியாண்டர் பயஸ், ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செரீனா சாதனை - சாம்பியன்

இதற்கிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்புச் சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

இது அவருக்கு 5வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக 12வது கிராண்ட் ஸ்லாம் பட்டமும் ஆகும்.

கடுமையாகப் போராடிய பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனினை 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிக் கனியைப் பறித்தார் செரீனா.

2 மணி நேரம் 7 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்தப் போட்டி ரசிகர்களை சீட் நுனிக்குக் கொண்டு சென்று விட்டது.

போட்டியின் முடிவில் செரீனா பேசுகையில், இந்தப் போட்டி யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக போயிருக்கலாம். இருப்பினும் நான் விடாமல் போராடி வென்று விட்டேன். ஜஸ்டின் ஹெனின் மிக அருமையாக போராடினார், கடும் போட்டியைக் கொடுத்தார் என்றார்.

செரீனாவுக்கு இது 12வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்பு அமெரிக்க வீராங்கனை பில்லி ஜீன் கிங் 12 பட்டங்களை வென்றதே சாதனையாக இருந்து வந்தது. அதை தற்போது செரீனா சமன் செய்துள்ளார்.

ரோஜர் பெடரருக்கு 16வது கிராண்ட்ஸ்லாம்

இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை 6-3, 6-4, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் வென்றார் பெடரர்.

இது பெடரருக்கு 4வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். அதேசமயம், மொத்தக் கணக்கில் 16வது பட்டமாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+