அந்தப் பக்கம் போயீராதிங்க.. அக்கா, தங்கச்சிங்க அடிச்சுத் தூள் கிளப்பப் போறாங்க!
ரிலோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. ஆனால் ஒலிம்பிக் கிராமம் ஏற்கனவே களை கட்ட ஆரம்பித்து விட்டது. எங்கு பார்த்தாலும் தேசங்களின் வண்ணங்களும், வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணப் பகிரலுமாக ஜெகஜோதியாக மாறி நிற்கிறது ரியோ.
இந்த ஒலிம்பிக் போட்டியில் பலருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மீதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மகளிர் ஒற்றையர் போட்டியிலும், இரட்டையர் போட்டியிலும் இந்த சகோதரிகள் கலக்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் நடப்புச் சாம்பியன் செரீனா சகோதரிகள்தான். இந்த முறையும் பதக்கத்தை தக்க வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

8 தங்கம்
மகளிர் இரட்டையர் பிரிவில் அக்காவும், தங்கையுமாக இதுவரை 8 தங்கப் பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் பெற்றுள்ளனர். இதில் ஆளுக்கு தலா 4 தங்கப் பதக்கம் அடக்கம்.

ஒற்றையரில் ஆளுக்கு ஒரு தங்கம்
மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனாவும், வீனஸ் வில்லியம்ஸும் ஆளுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

3 முறை ஜோடியாக
செரீனாவும், வீனஸும், 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இரட்டையர் பிரிவில் ஜோடியாக ஆடி தங்கம் வென்றுள்ளனர்.

அவருக்கு 36- இவருக்கு 34
வீனஸுக்கு 36 வயதாகிறது. செரீனாவுக்கு 34 வயதாகிறது. ஆனாலும் இருவரும் இன்னும் சளைக்காமல் டென்னிஸ் களத்தில் புயல் போல பாய்ந்து விளையாடி வருகின்றனர்.

இறங்கியதுமே பிராக்டிஸ்தான்
செரீனாவும், வீனஸும் ரியோ வந்து சேர்ந்ததுமே பிராக்டிஸில் இறங்க விட்டனர். இருவரும் பயிற்சி கோர்ட்டில் வியர்க்க விறுவிறுக்க விளையாடி பயிற்சி எடுத்தனர். உள்ளூர் சூழலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

பாசப் பறவைகள்
இருவரும் பயிற்சியில் ஈடுபட்டபோது இருவரும் தங்களது தலைமுடியை சரி செய்து கொண்டதும், தண்ணீர் எடுத்துக் கொடுத்ததும், அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் விவாதித்ததும் அவர்களுக்கிடையிலான சகோதப் பாரசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

2 பதக்கங்களுடன் திரும்புவார்களா?
ஒற்றையர் பிரிவில் செரீனா தங்கப் பதக்கம் வெல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல இரட்டையர் பிரிவிலும் இந்த ஜோடி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செக்ஸி மட்டுமல்ல.. ஸ்டிராங்கும் கூடவாம்!
ரியோவுக்கு வருவதற்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கலக்கல் படத்தைப் போட்டு விட்டுத்தான் கிளம்பியுள்ளார் செரீனா.. அதில் செக்ஸி ஸ்டிராங் என்று போட்டுள்ளார் செரீனா.. !


Click it and Unblock the Notifications