ஏடிபி பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ்-அரை இறுதியில் சோம்தேவ் தேவ்வர்மன் ஜோடி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏ.டி.பி.பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பிலிப்பைன்சின் டிரிட் கான்ராடு ஹுயு ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஏ.டி.பி., பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பிலிப்பைன்சின் டிரிட் கான்ராடு ஹுயு ஜோடி, இங்கிலாந்தின் ஜமி முர்ரே, லக்சம்பர்க்கின் கில்ஸ் முல்லர் ஜோடியை காலிறுதிப் போட்டியில் எதிர் கொண்டது.
இதில் அபாரமாக ஆடிய சோம்தேவ் ஜோடி 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில், வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் சோம்தேவ் ஜோடி, இஸ்ரேலின் ஜோனதன், ஆண்டிராம் ஜோடியை எதிர் கொள்ள உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:48 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications