Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்ஸ்: பயஸுடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றார் டென்னிஸ் சங்க பிரதிநிதி

Leander Paes
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இந்திய இரட்டையர் ஆடவர் பிரிவில் இளம் வீரரான விஷ்ணு வர்தனுடன் இணைந்து விளையாட மூத்த வீரர் லியாண்டர் பயஸ் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அவருடன் பேச்சுவாத்தை நடத்த இந்திய டென்னிஸ் சங்க பிரதிநிதி ராஜ்பால் லண்டன் சென்றுள்ளார்..

பயஸுடன் இணைந்து விளையாட மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் மறுத்ததால் புதிய சிக்கல் உருவானது. இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 2 இந்திய இரட்டையர் ஆடவர் அணிகளை அனுப்ப இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது. பயஸுடன் விஷ்ணு வர்தனும் மகேஷ் பூபதி- போபண்ணா இணை ஒரு அணியாகவும் லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இளம் வீரருடன் தம்மை இணைந்து விளையாட நிர்பந்திப்பதை ஏற்க முடியாது என்று ஏற்கெனவே பயஸ் கூறியிருந்த நிலையில் நேற்றைய அறிவிப்பினால் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தனுடன் இணைந்து விளையாடுவது பற்றியும் சானியாவுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடுவது குறித்தும் பயஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டுவதற்காக இந்திய டென்னிஸ் சங்க நிர்வாகி ராஜ்பால் லண்டன் சென்றுள்ளார்.

Story first published: Friday, June 22, 2012, 9:53 [IST]
Other articles published on Jun 22, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+