ஆஸி. ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் அரை இறுதியில் சானியா-பூபதி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் அரையிறுதிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, கனடாவின் அலக்சாண்ட்ரா வோஸ்னியாக், டேனியல் நெஸ்டர் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 3-6, 6-4, 10-5, என்ற செட்களில் வென்றது.
பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ரஷ்யாவின் எலினா டெமன்டிவா 6-2, 6-2 என்ற செட்களில் ஸ்பெயின் வீராங்கனை கர்லா நவாரோவாவை வென்று, அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
பெண்கள் ஒற்றையரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ரோடிக் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications