சாம்பியன் பட்டம், நம்பர் ஒன் இடமும்... அஸெரன்கா அட்டகாசம்!

விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை அவர் 6-3, 6-0 என்ற அதிரடி நேர் செட்களில் வீழ்த்திப் பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த கரோலின் வோஸ்னியாக்கியை பின்னுக்குத் தள்ளி விட்டு அந்த இடத்திற்கு முன்னேறினார் அஸெரன்கா.
அஸெரன்காவின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஷரோபாவோ கடுமையாக திணறினார். அஸெரன்காவின் ஆட்டத்திற்கு முன்பு ஷரோபாவாவின் அனுபவம் கடும் தடுமாற்றத்தைச் சந்தித்தது.
மிக அருமையாக ஷரோபாவாவை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் அஸெரன்கா.
இதற்கு முன்பு இந்த இரு வீராங்கனைகளும் ஆறு முறை மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா 3 வெற்றிகளை வைத்திருந்தனர். எனவே இறுதிப் போட்டி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தனது அசகாய ஆட்டத்தால் ஷரபோவாவை முந்தி விட்டார் அஸெரன்கா.
Story first published: Sunday, January 29, 2012, 12:55 [IST]
Other articles published on Jan 29, 2012


Click it and Unblock the Notifications