For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்டியா ஓபன் டென்னிஸ்: சானியா தோல்வி

By Staff
Sania
ஸ்டாக்ஹோம்,: ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வரும் நார்டியா நோர்டிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவிலிருந்து சானியா மிர்ஸா தோல்வியடைந்து வெளியேறினார்.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்து வரும் இப்போட்டித் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், பிரான்சின் எமிலி லோயிட்டை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

2வது சுற்று ஆட்டத்தில், செக் நாட்டின் இவெட்டா பெனிசோவாவுடன் மோதினார். கடுமையான மோதலாக இப்போட்டி அமைந்தது. இருப்பினும் அதிர்ஷ்டம் பெனிசோவா பக்கம் இருந்ததால் அவர் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சானியா தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே இரட்டையர் போட்டியிலும் சானியா ஜோடி தோற்று விட்டது என்பது நினைவிருக்கலாம்.

ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் பயஸ் - செக் நாட்டின் லூக்காஸ் ஜோடி, குரோஷியாவின் இவா கார்லோவிக் - நெதர்லாந்தின் ரோஜியர் வாசன் ஜோடியா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்து 3வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

மகேஷ் பூபதி - மார்க் நோல்ஸ் ஜோடிக்கு எதிராக மோதவிருந்த செக் ஜோடியான டாமஸ் பெர்டிச் - ரேடக் ஸ்டீபனாக் விளையாடாததால் பூபதி ஜோடிக்கு வாக்ஓவர் கிடைத்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+