மான்ட்ரியல்: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது சுற்றுப்போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பக்ரைனின் மார்க் நோவல்ஸ் ஜோடி, தென் ஆப்ரிக்காவின் ஜெப் கோட்சே, ஆஸ்திரேலியாவின் ஜூர்கென் மெல்சர் ஜோடியை சந்தித்தது.
இதில் சூப்பராக சர்வீஸ் செய்த பூபதி ஜோடி, எதிர் ஜோடியை திணற செய்தது. இதையடுத்து முதல் செட்டை 7-6 என வென்றது. தொடர்ந்து சூப்பராக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றியது.
சுமார் ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியை பூபதி ஜோடி 7-6, 6-4 என வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.
சானியா ஜோடி அதிர்ச்சி தோல்வி...
அமெரிக்காவில் நடக்கும் சின்சினாட்டி ஓபன் தொடரின் பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிரான்சிஸ்கா சியாவோன் ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த ஜோடி ஜிம்பாப்வேயின் காரா பிளாக், அமெரிக்காவின் லிசல் ஹியூபர் ஜோடியிடம் 4-6, 3-6 என வீழ்ந்தது.