யுஎஸ் ஓபன் டென்னிஸ்-2வது சுற்றில் பூபதி ஜோடி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்று போட்டிக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி முன்னேறியுள்ளது.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் லிசல் கியூபர் ஜோடி, பிரேசிலின் மார்சிலோ மெலோ, அமெரிக்காவின் வானியா கிங் ஜோடியை சந்தித்தது.
இதில் சிறப்பாக விளையாடி பூபதி ஜோடி 7-5, 6-0 என எளிதாக வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா ஜோடி தோல்வி...
நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, இத்தாலியின் பிரான்சிஸ்கா சியாவோன் ஜோடி, அர்ஜென்டினாவின் கிசாலே டுல்கோ, இஸ்ரேலின் ஷாகர் பியர் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா ஜோடி 2-6, 6-1, 5-7 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.


Click it and Unblock the Notifications