For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பி.என்.பி.பரிபாஸ் ஓபன்: அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி

By

கலிபோர்னியா: பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை அடுத்த இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி அர்ஜென்டினாவின் கிசலா டுல்கோ, பவோலா சுவாரஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இதில் சிறப்பாக ஆடிய சானியா, வெஸ்னினா ஜோடி 6-2 , 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பயஸ் ஜோடிக்கு தோல்வி:

ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ராடக் ஸ்டெபனக் ஜோடி ஸ்பெயினின் ரபேல் நாடால், மார்க் லோபெஸ் ஜோடியை எதிர்கொண்டது. கடுமையாகப் போராடியும் பயஸ், ராடக் ஜோடி 3-6, 3-7 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Story first published: Friday, March 16, 2012, 12:55 [IST]
Other articles published on Mar 16, 2012
English summary
Indian tennis player Sania Mirza and her Russian partner Elena Vesnina entered the semi-finals of the WTA Indian Wells Open after 6-2, 6-3 
 straight set victory against the Argentine pair Gisela Dulko and Paola Suarez.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+