பரிபாஸ் ஓபன்: சானியா மிர்சா ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இன்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் இலீனா வெஸ்னினா ஜோடி, செக் குடியரசின் ஆண்டிரியா ஹலவக்கோவா, லூசி ஹரடிக்கா ஜோடியை எதிர்த்து விளையாடியது.
போட்டியின் முதல் செட்டில் சானியாவின் ஜோடி 5-7 என்ற கணக்கில் கோட்டைவிட்டது. இந்த நிலையில் 2வது செட்டில் சிறப்பாக ஆடிய சானியா, வெஸ்னினா ஜோடி 7-5 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இதனால் போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. 3வது செட்டில் சானியா, வெஸ்னினா ஜோடியின் ஆட்டம் சிறப்பாக அமைய 10-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
45 நிமிடங்கள் தொடர்ந்து இப்போட்டியின் இறுதியி்ல் சானியா, வெஸ்னினா ஜோடி 5-7, 7-5, 10-3 என்ற கணக்கில் போட்டியில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் சானியா, வெஸ்னினா ஜோடி தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றது.
Story first published: Saturday, March 17, 2012, 14:50 [IST]
Other articles published on Mar 17, 2012


Click it and Unblock the Notifications