யு.எஸ். ஓபன் டென்னிஸ்: ஜோக்கோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் சாம்பியன்!
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜோக்கோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோக்கோவிச்சை, ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-4,3-6,6-4,6-1 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக்கை வீழ்த்தி ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால் வெல்லும் 13 பட்டம் இது!
Story first published: Tuesday, September 10, 2013, 9:29 [IST]
Other articles published on Sep 10, 2013


Click it and Unblock the Notifications