14வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதித்த பெடரர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், சுவீடனின் ராபிந் சோடர்லிங்கை எதிர் கொண்டார்.
இதில் புயல்வேக சர்வீஸ்களில் மிரட்டிய பெடரர் முதல் செட்டை 6-1 என எளிதாக வென்றார். இரண்டாவது செட்டை 7-6 என சிறிய போராட்டத்துக்கு பின் கைப்பற்றினார். தொட்ர்ந்து அசத்திய பெடரர் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார். இறுதியில் 6-1, 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வென்று பட்டம் வென்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பைனல் வரை வந்து பட்டத்தை ஸ்பெயின் வீரர் நடாலிடம் பறிகொடுத்த பெடரர் இம்முறை தனது முதல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 7வது வீரர் என்ற பெருமை பெற்றார்.
மேலும், இது அவர் கைப்பற்றும் 14வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கைப்பற்றிய வீரர் என்ற அமெரிக்காவின் பீட்டர் சாம்ப்ராஸ் (14) சாதனையை சமன் செய்துள்ளார்.
பெடரர் இதுவரை 3 ஆஸ்திரேலிய ஓபன் (2004, 2006, 2007), 1 பிரெஞ்ச் ஓபன் (2009), 5 விம்பிள்டன் (2003, 2004, 2005, 2006, 2007), 5 யுஎஸ் ஓபன் (2004, 2005, 2006, 2007, 2008) பட்டங்களை வென்றுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications