Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 7-வது முறையாக வெல்வாரா ரோஜர் பெடரர்!

Roger Federer
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இன்று ரோஜர் பெடரரும் ஆண்டி முர்ரேயும் மோதுகின்றனர். இன்றைய போட்டியில் பெடரர் வென்றால் 7-வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்குரியவராவார்.

டென்னிஸ் வரலாற்றில் 16 கிராண்ட்சிலாம் பட்டங்களைப் பெற்றவர் ரோஜர் பெடரர். உலகின் 3-ம் நிலை வீரராக இருந்து வருகிறார். இவர் விம்பிள்டன் படத்தை 2003ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து தக்க வைத்திருந்தார். விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் பீட் சாம்ராஸ். அவர் 7 முறை வென்றுள்ளார். இன்றைய போட்டியில் வென்றால் சாம்ராஸ் சாதனையை சமன் செய்வார் பெடரர்.

அதே நேரத்தில் விம்பிள்டன் பட்டத்தை முர்ரே வென்றால் 76 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டத்தை வெல்லும் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இருவரும் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் முர்ரே 8 முறையும், பெடரர் 7 முறையும் வெற்றி பெற்று உள்ளனர். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாகவே இருக்கும்.

Story first published: Sunday, July 8, 2012, 12:47 [IST]
Other articles published on Jul 8, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+