காலிறுதியில் பெடரர்-ஜான்கோவிச் தோல்வி

நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜெர்மனியின் டாமி ஹாசை எதிர் கொண்டார்.
இதில் முதல் இரண்டு செட்களிலும் மோசமாக விளையாடிய பெடரர் 6-7, 5-7 என பின்தங்கினார். ஆனால், கடைசி மூன்று செட்களிலும் கலக்கலாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார் பெடரர். இறுதியில் 6-7, 5-7, 6-4, 6-0, 6-2 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இவருக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என பெரிதும் எதிர்பார்த்த ஸ்பெயினின் நடால், செர்பியாவின் நேவக் டோகோவிச் ஆகியோர் தோல்வியடைந்ததை அடுத்து பெடரர் எளிதாக கோப்பை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோடிக் ஏமாற்றம்...
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் 4-6, 2-6, 3-6 என்ற செட்களில் பிரான்சின் கெல் மான்பில்சிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த நான்காவது சுற்றுப் போட்டியில் முன்னணி வீராங்கனை செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் 6-3, 0-6, 7-9 என அதிகம் பிரபலமாகாத ருமேனியாவின் சொரனா கிற்ஸ்டியாவிடம் தோல்வியடைந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications