டென்னிஸ் ஸ்டார் பெடரர் மனைவி இரட்டைக் குழந்தை பெற்றார்

இதுகுறித்து பெடரர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சுவிட்சர்லாந்தில், எனது மனைவி மிர்காவுக்கு அழகிய இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இருவரும் பெண் குழந்தைகள்.
குழந்தைகளுக்கு சார்லீன் ரிவா, மைலா ரோஸ் என பெயரிட்டுள்ளோம்.
இரு குழந்தைகளும், தாயாரும் நலமாக உள்ளனர். இது எங்களது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என்று கூறியுள்ளார் பெடரர்.
பெடரர் தம்பதிக்கு இதுதான் முதல் குழந்தையாகும். அதுவே இரட்டைக் குழந்தையாகியுள்ளதால் பெடரர் தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் விம்பிள்டனில் நடந்த இறுதிப் போட்டியில் பெடரரின் ஆட்டத்தை பார்த்து ரசித்தார் மிர்கா.
அந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கை, 5-7, 7-6 (6), 7-6 (5), 3-6, 16-14 என்ற மிக நீண்ட செட்களில் வீழ்த்தி தனது 15வது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை பெடரர் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
பெடரரின் மனைவி மிர்காவும் ஒரு டென்னிஸ் வீராங்கனைதான். சொந்த நாடு ஸ்லோவேகியா. இருப்பினும் சிறு வயதாக இருந்தபோதே அவரது குடும்பத்தினர் சுவிட்சர்லாந்துக்கு வந்து செட்டிலாகி விட்டனர். திருமணத்திற்கு முன்பு பெடரரின் மேனேஜராக இருந்தார் மிர்கா. அப்போதுதான் காதல் மலர்ந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications