15வது கிராண்ட்ஸ்லாம் வென்று பெடரர் சாதனை

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக விளையாடிய ரோடிக் முதல் செட்டை 7-5 என கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட பெடரர் அடுத்து செட்களை வென்று பதிலடி கொடுத்தார். நான்காவது செட்டை மீண்டும் ரோடிக் கைப்பற்ற, வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட் பரபரப்பாக அமைந்தது.
இதில் இருவரும் கடுமையாக மோதி கொண்டனர். இறுதியில் பெடரர் 16-14 என்ற செட்களில் கைப்பற்றினார். இறுதியில் 5-7, 7-6, 7-6, 3-6, 16-14 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இது பெடரர் வெல்லும் 6வது விம்பிள்டன் (2003-07, 09) மற்றும் 15வது கிராண்ட்ஸ்லாம் (ஆஸி. ஓபன் 3, பிரெஞ்ச் ஓபன் 1, விம்பிள்டன் 6, யுஎஸ் ஓபன் 5) பட்டம் வென்றார். இதன்மூலம் ஆண்கள் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக அமெரிக்காவின் பீட்டர் சாம்ப்ராஸ் 14 பட்டங்கள் வென்றதே சாதனையாக இருந்தது.
மீண்டும் நம்பர்-1.....
இந்த வெற்றியை தொடர்ந்து பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரபெல் நடாலை முந்தி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications