பிரெஞ்ச் ஓபன்-பைனலுக்கு முன்னேறிய பயஸ் ஜோடி

நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் டவுகி ஜோடி, கனடாவின் டேனியல் நெஸ்டர், செர்பியாவின் நெனத் ஜிமோன்ஜிக் ஜோடியை சந்தித்தது.
இதில் சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி முதல் செட்டை 7-6 என வென்றது. தொடர்ந்து சூப்பராக செயல்பட்ட பயஸ் ஜோடி இரண்டாவது செட்டையும் அதே புள்ளி கணக்கில் கைப்பற்றியது. இறுதியில் 7-6, 7-6 என்ற செட்களில் வென்று பைனலுக்குள் நுழைந்துள்ளது.
சபினா-கஸ்னெட்சோவா பைனலில் மோதல்...
பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையரில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் ரஷ்யாவின் டினரா சபினா, சுலோவேக்கியாவின் டாமினிகா சிபுல்கோவாவை சந்தித்தார். இதில் புயல்வேக சர்வீஸ்களால் மிரட்டிய சபினா முதல் செட்டை 6-3 என வென்றார். அடுத்த செட்டையும் 6-3 என எளிதாக வென்றார். இறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா 6-4, 6-7, 6-3 என ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வென்று, பைனலுக்குள் நுழைந்துள்ளார். பைனலில் இரண்டு ரஷ்யாவை வீராங்கனைகள் மோதுவதால் பட்டம் ரஷ்யாவுக்கு தான்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications