Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்ச் ஓபன்-சானியா ஜோடி வெற்றி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் அனா இவானோவிச் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீன தை பேவை சேர்ந்த ஜியா ஜங் சுவாங் ஜோடி, துருக்கியின் சேனக்லு, பெல்ஜியத்தின் யானினா ஜோடியை சந்தித்தது.

இதில் சிறப்பாக விளையாடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 எனவும், இரண்டாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றியது. இறுதியில் 7-5, 6-1 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

ஷரபோவா வெற்றி...

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீரங்கனை நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார். இதில் சூப்பராக விளையாடிய ஷரபோவா 6-2, 1-6, 8-6 என கடும் போராட்டத்துக்கு வெற்றி பெற்று பின் மூன்றவாது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் செர்பியாவின் அன்னா இவானோவிச் 6-1, 6-2 என எளிதாக தாய்லாந்து வீராங்கனை தாமரின் தானசுகர்னையும், ரஷ்யாவின் டினரா சபினா 6-1, 6-1 என மற்றொரு ரஷ்ய வீராங்கனை விடாலியா டயட்சென்கோவையும் வீழ்த்தினர்.

3வது சுற்றில் நடால்...

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெயி்ன் வீரர் ரபெல் நடால் 6-1, 6-4, 6-2 என நேர் செட்களில் தெய்முராஸ் கபாஸ்விலேவை வென்று, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+