For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன் சாம்பியன் பர்டோலி... டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விலகினார்!

சின்சினாட்டி: விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் மரியான் பர்டோலி, காயம் காரணமாக டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்புதான் அவர் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த நிலையில் டென்னிஸுக்கு அவர் முழுக்கு போட்டுள்ளார்.

பர்டோலியின் இந்த திடீர் ஓய்வு முடிவு டென்னிஸ் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் காயம்

தொடர் காயம்

பல்வேறு காயங்கள் காரணமாக தான் தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு குட்பை சொல்வதாக அறிவித்துள்ளார் பர்டோலி.

கடைசி போட்டியில் தோல்வி

கடைசி போட்டியில் தோல்வி

சின்சினாட்டியில் நடந்த மாஸ்ட்ர்ஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹெலப்புடன் மோதிய பர்டோலி அதில் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து தனது ஓய்வை அவர் அறிவித்தார்.

வெளியேற வேண்டிய நேரம் இது...

வெளியேற வேண்டிய நேரம் இது...

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அவர் கூறுகையில், ஓய்வு பெற வேண்டிய நேரம் இது. இதனால்தான் முடிவெடுத்துள்ளேன். வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக உணர்ந்ததால்தான் இந்தமுடிவு என்றார்.

அமெரிக்க ஓபனில் ஆட மாட்டார்

அமெரிக்க ஓபனில் ஆட மாட்டார்

இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. அதற்குள்ளாகவே தனது முடிவைஅவர் அறிவித்து விட்டார்.

விம்பிள்டனே போதும்

விம்பிள்டனே போதும்

மேலும் அவர் கூறுகையில் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது எனது கனவு. அது நிறைவேறி விட்டது. அந்த திருப்தியுடன்விலகுகிறேன் என்றார்.

13 வருட ஆட்டம்

13 வருட ஆட்டம்

கடந்த 13 வருடமாக டென்னிஸ் ஆடி வருகிறார் பர்டோலி என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி இல்லையே...

சக்தி இல்லையே...

பர்டோலி மேலும் கூறுகையில், எனது உடலில் உள்ள சக்தி முழுவதையும் வெளிப்படுத்தி விட்டதாக உணர்கிறேன். இதற்கு மேல் கொடுக்க எதுவும் இல்லை. விம்பிள்டனோடு போதும் என்றார்.

7ம் நிலை வீராங்கனை

7ம் நிலை வீராங்கனை

உலகத் தர வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறார் பர்டோலி. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் காயத்துடன் தான் ஆடி வந்தார். விம்பிள்டன் போட்டிக்குப் பின்னர் அவர் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000மாவது ஆண்டு முதல்

2000மாவது ஆண்டு முதல்

2000மாவது ஆண்டிலிருந்து டென்னிஸ் ஆடி வருபவர் பர்டோலி. அவரது தந்தை வால்டர்தான் இவரது பயிற்சியாளராக நீண்ட காலம் இருந்தவர். வால்டர் ஒரு டாக்டர் ஆவார்.

7 பட்டங்கள்

7 பட்டங்கள்

விம்பிள்டன் தவிர 7 பட்டங்களை அவர் வென்றுள்ளார். முதல் பட்டத்தை 2006ம் ஆண்டு ஆக்லாந்தில் வென்றார். கடைசியாக வென்றது விம்பிள்டன் பட்டமாகும்.

Story first published: Thursday, August 15, 2013, 15:40 [IST]
Other articles published on Aug 15, 2013
English summary
Marion Bartoli made a shock retirement announcement Wednesday, ending her career just weeks after winning Wimbledon. Bartoli, citing a string of injuries, dropped the bombshell shortly after losing in the second round of the Cincinnati Masters to Romania's Simona Halep. The top French star suffered a stunning 3-6, 6-4, 6-1 defeat to Halep. "It's time for me to retire and to call it a career. I feel it's time for me to walk away actually," said the 28-year-old.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+