நல்லவேளை நான் கர்ப்பமாக இல்லை... மரியா ஷரபோவா நிம்மதிப் பெருமூச்சு!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கெடுத்து வரும் மரியா, முதல் சுற்றுப் போட்டியில் மெலின்டா சிங்க்கை எதிர்த்துப் போட்டியிட்டு 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
முதல் சுற்றுப் போட்டிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மரியா பேசுகையில், எனக்கு ஒலிம்பிக் போட்டியின்போது வயிற்றில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தேன். பல டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன. எனக்கு கூட நாம் கர்ப்பமாக இருப்போமோ என்று பயம் வந்தது. ஆனால் டாக்டர்கள் அதை இல்லை என்று கூறி விட்டனர். இது சாதாரண வயிற்று வலிதான் என்று கூறி ஆறுதல் அளித்தனர்.
மேலும் எனக்கும் எனது காதலரான அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் சாஷா வுஜாசிக்குடன் இஸ்தான்புல்லில் நவம்பர் மாதம் திருமணம் நடக்கப் போவதாக வெளியான செய்திகளும் கூட தவறானவை. இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றார் மரியா.
மரியாவுக்கு மட்டுமல்ல அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் கூட 'நிம்மதி' தரும் செய்திதான் இது....!


Click it and Unblock the Notifications