Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோசை சாப்பிட்டேன், டேஸ்ட் சூப்பர்: சொல்கிறார் ஷரபோவா

Maria Sharapova
டெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவிற்கு தோசை மிகவும் பிடித்துவிட்டதாம்.

ஆறடி 2 அங்குள அழகுச் சிலையான ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா(25) இந்தியா வந்துள்ளார். முதன் முதலாக இந்தியா வந்துள்ள அவர் தனது அனுபவம் குறித்து கூறுகையில்,

இந்தியாவில் இருப்பதை அருமையாக உணர்கிறேன். இங்கு எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. டென்னிஸில் பிஸியாக இருக்கும் எனக்கு தற்போது தான் கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் கிடைத்தது. அதனால் தான் இங்கு வர முடிந்தது. இங்கு வந்திறங்கியதும் எந்த இந்திய உணவு வகையை சுவைக்கலாம் என்று ஷெப்பை கேட்டேன். தோசை சாப்பிட்டேன். அதன் சுவை நன்றாக இருந்தது. எனக்கு இந்திய மக்கள் மற்றும் கலாச்சாரம் பிடித்துள்ளது.

டென்னிஸில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாடுவது சாதாரண விஷயமன்று. அந்த வகையில் சானியா மிர்சா அருமையாக விளையாடுகிறார். கடந்த 2005ம் ஆண்டு நான் அவருக்கு எதிராக விளையாடுகையில் அவர் ஒரு திறமையான வீராங்களை என்று நினைத்தேன் என்றார்.

பாலிவுட்டில் நடிக்க எல்லாம் எனக்கு நேரமில்லை. இந்தியா வருவதற்கே எனக்கு அவ்வளவாக நேரம் இல்லை என்றார்.

Story first published: Monday, November 12, 2012, 11:29 [IST]
Other articles published on Nov 12, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+