மியாமி ஓபன்: இந்தியாவின் பயஸ் ஜோடி பைனலுக்கு தகுதி-பூபதி ஜோடி வெளியேற்றம்

அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் மைக் பிரென், பாப் பிரென் ஜோடியை எதிர்க் கொண்டது.
1 மணிநேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய ஜோடியான மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, கனடாவின் டேனியல் நெஸ்டர், பிளாரஸின் மேக்ஸ் மிரினி ஜோடியை எதிர்க் கொண்டது.
இப்போட்டியில் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
Story first published: Friday, March 30, 2012, 14:49 [IST]
Other articles published on Mar 30, 2012


Click it and Unblock the Notifications