பெடரரிடம் தோற்றார் சாம்ப்ராஸ்
நியூயார்க்: நியூயார்க் நகரில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், மாஜி நம்பர் ஒன் வீரர் பீட் சாம்ராசை அதிரடியாக தோற்கடித்தார்.
மேடிசன் ஸ்கோயர் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சி போட்டியில் ரோஜர் பெடரர், பீட் சாம்ப்ராசை 6-3, 6-7(4-7), 7-6(8-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
19 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விளையாட்டில் டென்னிஸ் ஜாம்பவான்களின் அதிரடி ஆட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இளம் வீரர் பெடரருக்கு சரிசமமாக போட்டியிட்டார் சாம்ப்ராஸ்.
ஆட்டத்தின் துவக்கத்தில் பெடரரிடம் சாம்ப்ராஸ் தடுமாறினார். பின்னர் சமாளித்துக் கொண்டு பெடரருக்கு நெருக்கடி கொடுத்தார்.
செப்டம்பர் 2002 ல் யூ.எஸ் ஓபன் போட்டியில் தனது பதினான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சாம்ப்ராஸ் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


Click it and Unblock the Notifications