யுஎஸ் ஓபன்-அரையிறுதியில் பயஸ் ஜோடி, பூபதி ஜோடி

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ரேனா ஸ்டப்ஸ், சுவீடனின் ராபர்ட் லின்ஸ்டெட் ஜோடியை சந்தித்தது. இதில் பயஸ் ஜோடி 7-5, 3-6, 10-6 என வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
இதில் பயஸ் ஜோடி, சீன தைபேவின் சூ வை ஹி்ஷ் மற்றும் ஜிம்பாப்வேயின் கெவின் உலியட் ஜோடியுடன் மோதுகிறது.
மற்றொரு கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் லிசல் ஹியூபர் ஜோடி 6-4, 6-3 என அமெரிக்காவின் பெத்தானி மேட்டக், நெனத் ஜிமோன்ஜிக் ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இதில் பூபதி ஜோடி அமெரிக்காவின் கார்லி குல்லிக்சன், டிராவிஸ் பேரட் ஜோடியை சந்திக்கிறது.
ஆண்கள் இரட்டையரில் காலிறுதிக்கு தகுதி...
அதே போல் பயஸ் ஜோடி மற்றும் பூபதி ஜோடியினர் ஆண்கள் இரட்டையரிலும் அசத்தி வருகின்றனர். நேற்று நடந்த மூன்றாவது சுற்றுப் போட்டியில் பயஸ், செக் குடியரசின் லூகாஸ் டௌகி ஜோடி 7-5, 6-4 என ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவல், ஜூர்கன் மெல்சர் ஜோடியை தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு ஆண்கள் இரட்டையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி 6-4, 6-4 என சீன தைபேவின் ஹூசுன் லூ, இஸ்ரேலின் டூடி செலா ஜோடியை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications