யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர்-காலிறுதியில் பூபதி, பயஸ் ஜோடிகள்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜேடி மற்றும் மகேஷ் பூபதி ஜோடிகள் தகுதி பெற்றுள்ளன.
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் அமெரிக்காவில் நடக்கிறது.
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் லிசல் ஹியூபர் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜில் கிரைபஸ், எரிக் பூடோரக் ஜோடியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, இத்தாலியின் பிளாவிய பென்னட்டா, செர்பியாவின் துஷன் வெமிக் ஜோடியை எதிர்கொண்டது.
சுமார் 74 நிமிடங்கள் நடந்த போட்டியில் பயஸ் ஜேடி 6-4, 6-4 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications