Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியன் ஓபன்: பயஸ், பூபதி வெற்றி

Paes and Mahesh Bhupathy
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பயஸ்-நேவல்ஸ் மற்றும் பூபதி-டவுகி ஜோடிகள் வெற்றி பெற்றுள்ளன.

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லூகஸ் டவுகி ஜோடி 4-6, 6-1, 6-2 என்ற செட்களில் சுவிட்சர்லாந்தின் ஈவ்ஸ் அலக்ரோ, பிரான்சின் பேப்ரிஸ் ஆன்டாரோ ஜோடியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் மகேஸ் பூபதி, பகாமசின் மார்க் நேவல்ஸ் ஜோடி 6-3, 6-2 என ரஷ்யாவின் மிக்கேல் யாழ்னி, ஜெர்மனியின் மிஸ்சா ஜெரிவ் ஜோடியை வென்றது.

சானியா தோல்வி...

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் வானியா கிங் ஜோடி, 6-4, 1-6, 1-6 என ரஷ்யாவின் வெரா துஷேவினா, உக்ரைனின் அல்கா சவ்சுகா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் டெமன்டிவா, கஸ்னட்சோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் ஸ்பெயினின் நடால், பிரான்சின் டோங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:22 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+