டென்னிஸ்: காலிறுதியில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி

இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள விளையாட்டுக்களில் ஒன்று டென்னிஸ். இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியும், லியாண்டர் பயஸும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
இருவரும் தங்களது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் ஜோடியான கேயல் மான்பில்ஸ், கில்லஸ் சைமோன் ஜோடியை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரத்திற்குள் முடிந்த இந்த ஆட்டத்தில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் பயஸ்-பூபதி ஜோடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றது.
2வது சுற்றில், பிரேசிலின் ஆன்ட்ரே சே- மார்செலோ மெலா ஜோடியை பயஸ்-பூபதி ஜோடி 6-4, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தது.
ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் நடந்த போட்டியில் இந்தியா இந்த வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் காலிறுதிப் போட்டியில் இந்தியா நுழைந்துள்ளது.
குத்துச்சண்டை-அகில் குமாருக்கு வெற்றி:
குத்துச்சண்டையில், 54 கிலோ பான்டம் வெயிட் பிரிவில், இந்தியாவின் அகில் குமார், அபாரமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பிரான்ஸ் வீரர் அலி ஹாலப்பை அகில் குமார் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications