யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர்-பயஸ் ஜோடி சாம்பியன்
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் - காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
லியாண்டர் பெறும் 8வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு இரட்ைடயர் பிரிவில் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் பயஸ் - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, இங்கிலாந்தின் ஜேமி முரே - அமெரிக்காவின் லீஸல் ஹூபர் ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில், பயஸ் ஜோடி சிறப்பாக ஆடி 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பயஸும் - பிளாக்கும் இணைந்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். பயஸுக்கு இது எட்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
ஆடவர் இரட்டையர் போட்டியிலிலும் பயஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இப்போட்டியில், அவரும், செக் வீரர் லூகஸ் டோஹியும், அமெரிக்க இரட்டையர் ஜோடியான பாப் மற்றும் மைக் பிரையனை சந்திக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications