நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், விளையாட இந்தியாவின் லியாண்டர் பயஸ்- செக் நாட்டின் லூகாஸ் டிலோகி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
பயஸ்-டிலோகி ஜோடி, தென் ஆப்பிரிக்காவின் ரிக் டி வோஸ்ட் - ஆஷ்லி பிஷர் ஜோடியை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்தித்தது.
இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இந்திய - செக் ஜோடி வீழ்த்தியது.
ஜூனியர் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி அமெரிக்காவின் டெனிஸ் குத்லாவை, 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.