யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர்-பைனலில் பயஸ் ஜோடி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6-2, 3-6, 10-5 என்ற செட்களில் சீன தைபேவின் சூ வை ஹிஸ் மற்றும் ஜிம்பாப்வேயின் கெவின் உலியட் ஜோடியை வென்றது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் லிசல் ஹியூபர் ஜோடி 3-6, 4-6 என்ற செட்களில் அமெரிக்காவின் கார்லி குல்லிக்சன் மற்றும் டிராவிஸ் பாரேட் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இரட்டையரில் அரையிறுதிக்கு முன்னேற்றம்...
நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி மற்றும் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதில் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி 6-4, 4-6, 7-6 என குரோஷியாவின் இவான் லூசிபிக், பிரான்சின் மைக்கேல் லாட்ரா ஜோடியை வீழ்த்தியது.
பயஸ், செக் குடியரசின் லூகாஸ் டௌகி ஜோடி 6-3, 5-7, 6-4 என தென் ஆப்ரிக்காவின் வெஸ்லே மூடி, பெல்ஜியத்தின் டிக் நார்மேன் ஜோடியை தோற்கடித்தது.
அரையிறுதியில் செரினா...
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
நடால் காலிறுதிக்கு தகுதி...
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால், குரோஷியாவின் மரின் சிலிக், அர்ஜென்டினாவின் ஜூவன் மார்டின் டெல் பெட்ரோ, சிலியின் பெர்னாண்டோ கோன்சலாஸ் ஆகியோர் காலிறுதிக்குள் நுழைந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications