பூபதி ஜோடியை வீழத்தி பயஸ் ஜோடி சாம்பியன்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி, மற்றொரு இந்திய வீரரான மகேஷ் பூபதி ஜோடியை வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
நேற்று நடந்த இப்போட்டியில் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டௌகி ஜோடி, பூபதி மற்றும் பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை பூபதி ஜோடி 6-3 என எளிதாக வென்றது. இதையடுத்து சுதாரித்து விளையாடிய பயஸ் ஜோடி அடுத்த இரண்டு செட்களையும் வரிசையாக வென்று அசத்தியது.
சுமார் 2 மணி நேரம் 3 நிமிடம் நடந்த போட்டியில் பயஸ் ஜோடி 3-6, 6-3, 6-2 என வென்றது.
இது ஆண்கள் இரட்டையரில் லியாண்டர் பயஸ் கைப்பற்றும் 6வது கிராண்ட்ஸ்லாம் மற்றும் 2வது யுஎஸ் ஓபன் பட்டமாகும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications