பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி முன்னேறியது
நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது.
நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டவுகி ஜோடி 7-6, 6-3 என்ற செட்களில் பிரான்சின் ஜூலியன் பென்னட்டு, நிகோலஸ் மகுத் ஜோடியை வென்று, காலிறுத்திக்கு முன்னேறியது.
பூபதி ஜோடி வெற்றி...
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றுப்போட்டியில், இந்தியாவின் மகேஸ் பூபதி, பக்ரைனின் மார்க் நாவல்ஸ் ஜோடி 7-5, 6-7, 7-6 என கடும் போராட்டத்துக்கு பின் சுவீடனின் பிரன்ஸ்டார்ம், ஜூன் ரோஜர் ஜோடியை வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா தோல்வி
கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, மகேஸ் பூபதி ஜோடி 6-1, 7-5 என பிரான்சின் நாதலி டெச்சி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
நான்காவது சுற்றில் பெடரர்...
ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-1, 6-4, 6-4 என்ற செட்களில் பிரான்சின் பவுல் ஹென்றி மாத்தியூவை வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா கஸ்னெட்சோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.