யுஎஸ் ஓபன் டென்னிஸ்-பயஸ் ஜோடி வெற்றி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகஸ் டௌகி ஜோடி, ரோமானியாவின் விக்டர் ஹனஸ்கு, கேப்ரியல் டிரிபு ஜோடியை எதிர் கொண்டது.
இதில் சிறப்பாக விளையாடிய பயஸ் ஜோடி முதல் செட்டை 7-6 என வென்றது. அடுத்த செட்டையும் அதே கணக்கில் கைப்பற்றியது.
சுமார் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில் பயஸ் ஜோடி 7-6, 7-6 என்ற செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications