For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யு.எஸ்.ஓபன் இரட்டையர் இறுதிப் போட்டியில் பயஸ் ஜோடி தோல்வி

By Staff

நியூயார்க்: அமெரிக்க ஓபன் இரட்டையர் இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி அதிர்ச்சித் தோல்வியுற்றது.

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் லியாண்டர் பயஸ்- காரா பிளாக் ஜோடி அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்த நிலையில் இரட்டையர் இறுதிப் போட்டியிலும் பயஸ் ஜோடி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அமெரிக்காவின் சகோதரர் ஜோடியான பாப் பிரையன், மைக் பிரையன் ஜோடி அந்தக் கனவை தகர்த்து விட்டது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில், பிரையன் சகோதரர்கள் ஜோடி இந்தியாவின் லியாண்டர் பயஸ்,செக் நாட்டின் லூகாஸ் டோஹி ஜோடியை 7-6 (7-5), 7-6 (12-10) என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

கடுமையாகப் போராடியும் பயஸ் ஜோடியால் வெல்ல முடியாமல் போனது. இதன் மூலம் அமெரிக்க ஓபனில் இரண்டு சாம்பியன் பட்டங்களை வெல்லும் வாய்ப்பை பயஸ் தவற விட்டார். இதை வென்றிருந்தால் இது அவருக்கு 9வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+