Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டன் ஒலிம்பிக்: டென்னிஸ் கலப்பு இரட்டையரில் இந்திய இணை காலிறுதிக்கு தகுதி

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- சானியா மிர்சா இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் லியாண்டர் பயஸ்-சானியா இணையானது செர்பியாவின் நினாட் சிமொன்ஜிக்-அனா இவானோவிக் இணையுடன் மோதியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் தொடக்கம் முதல் இந்திய இணைதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக இந்திய இணை கைப்பற்றியது. அடுத்த 2-வது செட்டிலும் இந்திய இணை அபாரமாக ஆடியது. இதில் 6-4 என்ற கணக்கில் செர்பிய இணையை இந்திய இணை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் லியாண்டர் பயஸ்- சானியா இணை காலிறுதிக்குப் தகுதி பெற்றுள்ளது. காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பயஸ்- சானியா இணை, பெலராஸ் நாட்டின் மேக்ஸ் மிர்னியி- விக்டோரியா அசாரென்கா இணையை எதிர்கொள்கிறது.

Story first published: Friday, August 3, 2012, 9:25 [IST]
Other articles published on Aug 3, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+