8வது ரேங்க்குக்கு உயர்ந்தார் பயஸ்: பூபதி-11
டெல்லி: ஆடவர் டென்னிஸ் இரட்டையர் தர வரிசைப் பட்டியலில் லியாண்டர் பயஸ் 8 இடங்கள் முன்னேறி 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் ஜோடி அபாரமாக வென்று சாம்பியன் ஆனது. இந்த வெற்றி, தர வரிசைப் பட்டியலில் பயஸுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது.
8 இடங்கள் முன்னேறி 8வது ரேங்குக்கு பயஸ் முன்னேறியுள்ளார்.
மகேஷ் பூபதி ஒரு இடம் முன்னேறி 11வது ரேங்க்கைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியுற்று வெளியேறியது.
இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் 3 இடங்கள் பின்னேறி 220வது இடத்திலும், சோம்தேவ் தேவராமன் 244வது இடத்திலும் உள்ளனர்.
ஒற்றையர் பிரிவில் ரபேல் நாடால் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் ரோஜர் பெடரரும், 3வது இடத்தில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்கும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications